பட வாய்ப்புகள் பெரிதும் இல்லை.. திருமண வாழ்க்கைக்கு பிளான் போடும் நடிகை தமன்னா

marriage Tamannaah
By Karthick Raja Sep 23, 2021 04:25 AM GMT
Report

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான தமன்னாவிற்கு கல்லூரி பட ம் தனி அங்கீகாரத்தை தேடி தந்தது. இதனை அடுத்து தனுஷ், சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார்.

நடிகையாக மட்டுமல்லாமல் உலகப் புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்கி வருகிறார். நடிகை தமன்னாவின் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆக்ஷன். இதன்பின் தமிழில் பெரிதும் பட வாய்ப்புகள் நடிகை தமன்னாவிற்கு வரவில்லை. ஆனால், தெலுங்கு, ஹிந்தி சில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக நடிகை தமன்னாவின் திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன் கூட, பிரபல தொழிலதிபருடன் நடிகை தமன்னாவிற்கு திருமணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், பட வாய்ப்புகள் குறைந்து வருவதால், திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று தமன்னா முடிவெடுத்துள்ளாராம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்ளவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.