இதுவும் போச்சா.. விக்ரமின் கடின உழைப்புக்கு விழுந்த மற்றொரு அடி
Vikram
Actors
Tamil Actors
By Tony
விக்ரம் தமிழ் சினிமாவில் பல தைரியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர். அதை விட கதாபாத்திரத்திற்காக எப்படிப்பட்ட உடல் எடையை ஏற்றுவார் மற்றும் குறைப்பார்.
இவர் நடிப்பில் உலக தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த படம் தங்கலான். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதை தொடர்ந்து படத்தின் வசூல் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.
ஆம், தங்கலான் உலகம் முழுவதும் இப்பொழுது வரை ரூ 40 கோடி தான் வசூல் செய்துள்ளது, வரும் நாட்கள் எல்லாம் பார்த்தால் ரூ 60 கோடி வசூல் வந்தாலே பெரிது என்ற நிலை உருவாகியுள்ளது. விக்ரமின் கடின உழைப்பில் வந்து மற்றொரு அடியாக இந்த தங்கலான் அமையும் என்றே பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.