தலைக்கணத்தில் அடம்பிடிக்கும் தயாரிப்பாளர்? தனுஷை வைத்து விளையாடும் தாணு..

Dhanush Selvaraghavan Ponniyin Selvan: I Naane Varuven Kalaippuli S Thanu
By Edward Sep 28, 2022 06:15 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனது அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் பல ஆண்டுகள் கழித்து நானே வருவேன் படத்தில் நடித்துள்ளார்.

பிரமோஷன் இல்லா நானே வருவேன்

இப்படம் மிகப்பெரியளவில் எதிர்ப்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அசுரன், கர்ணன் போன்ற தனுஷுன் படங்களை தயாரிப்பாளர் தாணு அவர்கள் தான் தயாரித்து வெளியிட்டார். ஆனால் அப்படத்திற்கு பிரமோஷன் செய்ய பெரியளவில் ஈடுகொடுக்காமல் வெற்றியை கண்டார்.

அதேபோல் நாளை வெளியாகும் இப்படத்தின் பிரமோஷன் விசயங்கள் எதுவும் நடக்காமல் இருக்கிறது. கபாலி படத்திற்கு விமானத்தில் போஸ்டர் ஒட்டி பறக்கவிட்ட தாணு நானே ஒருவன் படத்திற்கு அமைதியாகவே இருந்து வருகிறார்.

அதேபோல் நாளை மறுநாள் வெளியாகவுள்ள மணிரத்னமின் பொன்னியின் செல்வன் பிரமோஷன் உலகளவில் பிரம்மிக்க வைக்கும் படியான பிரஸ்மீட் என்று பிரமோஷனை வாரிவழங்கி வருகிறார்கள்.

தனுஷ் ரசிகர்கள் கோபம்

இதுகுறித்து தாணு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் பிரமோஷன் செய்யாமலே நானே வருவேன் படத்தின் வெற்றியை கொண்டாடுவேன் என்றும் மற்றவர்களை போல பிரமோஷன் செய்ய மாட்டேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் பிரமோஷன் வேலைகள் பல நாட்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டேன்.

அதாவது பல நாளிதழ்களில் போஸ்டர்களை வெளியிட்டும் வருகிறேன். எனக்கு தனுஷ் - செல்வராகவன் கூட்டணி எப்படி இருக்கும் ரசிகர்கள் அவர்களை நம்பி வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிது என்று தெரிவித்துள்ளார் தாணு. இதனை வைத்து பலர் இணையத்தில் மீம்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.