விஜய்-காக வலை வீசத்துடிக்கும் அக்கடதேசத்து ஹீரோயின்!! திரிஷா, கீர்த்தி சுரேஷை ஓரங்கட்ட நினைக்கும் 19 வயது நடிகை
தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் அதிலும் 100 கோடிக்கும் மேல் சம்பளமாக பெறும் நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். தற்போது லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருவது தான் தற்போதைய டாப் டாப்பிக்காக இருந்து வருகிறது.
அதேபோல் விஜய் படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்க பல நடிகைகள் கனவுகண்டு வருகிறார்கள். அந்த லிஸ்ட்டில் யாருக்கும் இடம் கொடுக்காமல் இருந்து வந்தார்கள். நடிகை சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஆனால் சமீபத்திய விஜய் படங்களில் அக்கடதேசத்து நடிகைகளான மாளவிகா மோகனன், பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா போன்ற நடிகைகளையே நடிக்க வைத்துள்ளார் விஜய்.
அப்படியிருக்கும் நிலையில் தமிழ் நடிகை திரிஷா பல ஆண்டுகள் கழித்து அவருடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் அடுத்து விஜய் நடிக்கும் 68வது படத்தினை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.
அப்படத்தில் எந்த நடிகை நடிப்பார் என்ற பேச்சு சென்று கொண்டிருக்கும் நிலையில், 19 வயதே ஆனா தெலுங்கு சினிமா நடிகை கிருத்தி செட்டியின் பெயர் முதல் பெயராக இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே சூர்யாவின் வணங்கான் படத்தில் இருந்து விலகிய நிலையில் விஜய்யுடன் நடிக்க ஆசை என்று சமீபத்தில் பேட்டிகளில் கிருத்தி செட்டி கூறி வந்துள்ளார்.
அந்தவகையில் தற்போது திரிஷாவுக்கு அடுத்து விஜய்யின் ஃபேவரெட் நடிகைகளான கீர்த்தி சுரேஷ், சமந்தாவை விஜய்யின் 68 படத்தின் மூலம் ஓரங்கட்டவுள்ளார் நடிகை கிருத்தி செட்டி.
ஆனால் இந்த விசயம் எனக்கு தெரியாது என்றும் நான் அதற்காக காத்திருக்கிறேன் என்று கிருத்தி செட்டி கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Actress Krithi Shetty About Thalapathy Vijay ??#Leo @actorvijay pic.twitter.com/KJFLspTYsq
— Mᴜʜɪʟツ (@MuhilThalaiva) May 11, 2023