மும்பையை அதிரவைத்த லெஜண்ட் சரவணா.. பட்டையை கிளப்பும் பாக்ஸ் ஆபிஸ்..
இரட்டை இயக்குனர்கள் என்று அழைக்கப்படும் ஜேடி ஜெர்ரியை வைத்து சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் தலைவர் சரவணா அருள் நடித்துள்ள படம் தி லெஜண்ட். 40 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில், நடிகர் விவேக், பிரபு, ஊர்வசி, ராய் லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்று சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியாகியது. உலகம் முழுவதும் இப்படம் சுமார் 2 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 1.5 கோடி வரை வசூலித்துள்ளது தி லெஜண்ட் படம்.
40-50 கோடியில் எடுக்கப்பட்ட தி லெஜண்ட் படம் பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்து வெளியான படத்தினை முறியடித்துள்ளதாம். அதாவது பாலிவுட் நடிகை கங்கனா நடிப்பில் வெளியான தாகத் சுமார் 80 கோடி செலவில் எடுக்கப்பட்டு வெறும் 40 கோடி மட்டுமே வசூலித்து படுதோல்வியை சந்தித்தது.
அதேபோல் டாப்ஸி பண்ணு நடிப்பில் வெளியான மிதாலி ராஜின் வாழ்க்கை படமான சபாஷ் மித்து என்ற படம் 30 கோடி பட்ஜெட்டில் வெளியானது. ஆனால், அப்படம் 40 கோடி மட்டுமே வசூலித்ததுள்ளது.
பாலிவுட் படங்கள் வசூலிக்காக வசூலை சுலபமான தி லெஜண்ட் படம் ஒரே நாளில் 2 கோடி வசூலித்தது பாலிவுட் சினிமாவையே அதிரவைத்துள்ளது.