சங்கர் மகளாக இருப்பதால் தான் இந்த அந்தஸ்தா? கொடிக்கட்டி பறக்கும் அதிதி சங்கர்.

Karthi Shankar Shanmugam Aditi Shankar Viruman
By Edward Aug 18, 2022 08:48 AM GMT
Report

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் பெயர் அதிதி சங்கர். இயக்குனர் சங்கர் மகளாக விருமன் படத்தில் கமிட்டாகியது முதல் அவரது நடவடிக்கைகளை ரசிகர்கள் கவனித்து வருகிறார்கள்.

அப்படி கார்த்தி, அதிதி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது விருமன் படம். இப்படத்தின் பிரஸ் மீட்டிங், ஆடியோ லான்ச், சக்சஸ் மீட் போன்ற நிகழ்ச்சிகளில் அதிதியிடம் தான் அனைத்து ஊடகத்தினரின் பார்வை மேலோங்கியிருந்து வருகிறது.

இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வாய்ப்பும் கிடைத்து 25 லட்சத்தில் கமிட்டாகி மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறார். இதற்கு முழுக்க முழுக்க சங்கர் சார் தான் காரணம் என்று பலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

இனி வரும் காலங்களில் அதிதி 5 படங்களில் கமிட்டாகினால் போதும் தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் முன்னணி நடிகைகளையே மிஞ்சிவிடுவார் என்று ஊடக பத்திரிக்கையாளர்கள் கூறி வருகிறார்கள்.