தனுஷை விட்டு பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருட்டு.. அட கொடுமையே

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Karthick Raja Mar 20, 2023 03:30 AM GMT
Report

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இவர்களுடைய பிரிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த பிரிவு காரணம் என கூறி பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் தனுஷ் போயஸ் கார்டனில் ரூ. 150 கோடி செல்வி பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டினார். ரஜினிகாந்தை பழிவாங்க தான் இவ்வளவு பெரிய வீட்டை தனுஷ் கட்டியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இந்நிலையில், இன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு போயுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் திருட்டு போய் இருப்பதாகவும், பல லட்சம் மதிப்புள்ள இந்த நகைகளை அவர் வீட்டில் வேலை செய்யும் மூன்று பணியாளர்கள் தான் திருடியிருப்பார்கள் என சந்தேகித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.