விருது நிகழ்ச்சிக்கு கலக்கல் லுக்கில் வந்த லோகா பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன்..
கல்யாணி பிரியதர்ஷன்
தெலுங்கில் 2017ல் வெளியான ஹெல்லோ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.

இதனையடுத்து மாநாடு படத்திலும் நடித்தார். பின் 3 ஆண்டுகளாக மலையாள படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் லோகா படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை 300 கோடிக்கும் மேல் வசூலையும் குவித்தது.
தற்போது ஜீனி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஒரு பாடலில் கிளாமராக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இதனையடுத்து The Hollywood Reporter India வழங்கிய சிறந்த படத்திற்கான விருதுகளில் கல்யாணி நடித்த லோகா சாப்டர் 1 படத்திற்கு வழங்கியது.

இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடம் கல்யாணி கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சிக்கு கோல்டன் ஆடையணிந்து சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.







