பிரசாந்த்-ஆல் அவமானப்படுத்தப்பட்டாரா அஜித்! விமர்சனத்திற்கு விளக்கம் அளித்த நடிகரின் தந்தை..

Ajith Kumar Prashanth Thiagarajan
2 நாட்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்று கொடிக்கட்டி பறந்து வரும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்த பின் தற்போது அவருடன் சேர்ந்து ஏகே61 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

இப்படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்திலும் நடிக்கவுள்ளார் அஜித். இந்நிலையில் ஆரம்பகட்டத்தில் அஜித்தை விட முன்னணி நடிகர் என்ற பேர் பெற்று வந்த பிரசாந்த் அஜித்தை அவமானப்படுத்தினார் என்றும் மரியாதை கொடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தது.

அதற்கு காரணம் ஒரு படப்பிடிப்பின் போது பிரசாந்திற்கு மாலை அணிவிக்கப்பட்டும் அஜித்தை ஓரத்தில் நிற்கவைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் வெளியானது தான் காரணம்.

இதெல்லாம் ஒரு யூகம் தான் என்று நடிகர் பிரசாந்தின் தந்தை நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது பிரசாந்திற்கு பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவது வழக்கம் தான்.

அதனால் தான் பிரசாந்திற்கு மாலை அணிவிக்கப்பட்டும், அஜித் மாலை இல்லாமலும் இருந்தாரே தவிர அஜித தலை குணிய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தான் அப்படியான யூகங்களை பரப்பியுள்ளார்கள் அப்போதிருந்த மீடியாக்கள் என்று கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.