தீயில் எரிந்த கல்யாண புடவை.. கவிதாவால் காத்திருந்த கலவரம் - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். நேற்றைய எபிசோடில் கவிதா மஹாவின் கல்யாண புடவையை தீயில் போட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
திருமாங்கல்யம் இன்றைய எபிசோட்
அதாவது தனது கல்யாண புடவை பற்றி எரிவதை பார்த்து மகா அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து புடவையை அணைக்க முயற்சி செய்ய திவ்யா என்ன பண்ற? வேற புடவை வாங்கிக்கலாம் என தடுக்க முயற்சி செய்ய மகா என்னுடைய கல்யாண புடவை என்று சொல்லி அதை எடுத்து அணைத்து பத்திரப்படுத்த திவ்யா யார் இப்படி செய்தது என கோபப்பட கவிதா நான் தான் அது ரொம்ப அழுக்காக கடந்தது அதனால எடுத்து தீயில் போட்டேன் என்று சொல்கிறாள்.

இதைக் கேட்டு அம்பிகா மற்றும் தாத்தா என இருவரும் கவிதாவை பிடித்து திட்டுகின்றனர். மகாவுக்கு தீயை அணைத்ததால் கையில் காயம் ஏற்பட்டிருக்க திவ்யா அவளை அழைத்துச் சென்று கைக்கு மருந்து போட்டுவிட்டு திட்டுகிறாள். மகா தனது திருமணம் பற்றியும் திருமண புடவை பற்றியும் எமோஷனலாக பேச திவ்யா உன் புருஷனுக்கு உன்னோட வாழ கொடுத்து வைக்கல என கோபப்பட பக்கத்திலேயே நிற்கும் திரு குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான்.
அதன் பிறகு இரவு மகா கையில் ஏற்பட்ட காயத்தால் சாப்பிட முடியாமல் தவிக்க அப்போது கீழே வந்த திரு அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறான். கவிதா இதைப் பார்த்து அனைவரையும் கூட்டி பிரச்சனை செய்ய அம்பிகா உன் மனசுல அழுக்கு இருக்கு அதனால தான் உனக்கு பார்க்கிறதெல்லாம் தப்பா தெரியுது.. மகா இடத்தில யாராக இருந்தாலும் என் பையன் இதுதான் செஞ்சிருப்பான் என திருவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறாள். பிறகு அம்பிகாவே மகாவிற்கு சாப்பாடு ஊட்டி விட மகா எமோஷனல் ஆகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். ராதா கிருஷ்ணனாக மாறிய அர்ஜுன், சாமந்தி.. அரசிக்கு காத்திருந்த அதிர்ச்சி - சாமந்தி இன்றைய எபிசோட் அப்டேட் தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சாமந்தி.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமந்தி கிருஷ்ண ஜெயந்திக்கான ஏற்பாடுகளை செய்து முடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சாமந்தி மகேந்திரன் இடம் சென்று ஐயா எல்லா ஏற்பாடும் ரெடி போட்டோ மட்டும் வரணும் என்று சொல்ல மகேந்திரன் கோடீஸ்வரனுக்கு போன் செய்து போட்டோ எங்கே என்று கேட்க அவன் காரில் உட்காந்து வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எங்கு தேடியும் போட்டோ கிடைக்கவில்லை என்று சொல்கிறான்.
இதனால் மகேந்திரன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க சாமந்தி நீங்க ஃப்ரீயா விடுங்க நான் பார்த்துக்குறேன் என்று சொல்கிறாள். அதன் பிறகு சாமந்தி அர்ஜுனை சந்தித்து டிரைவர் தம்பி டிரைவர் தம்பி என கெஞ்சி கேட்கிறாள். அடுத்ததாக அரசியின் தோழிகள் வீட்டுக்கு வர நடு வீட்டில் ராதாகிருஷ்ணன் பெரிய சிலையாக நிற்க அதைப் பார்த்து வியப்படைகின்றனர். அப்போது மகேந்திரன் அது சிலையில்ல போட்டோ கிடைக்காத காரணத்தினால் அர்ஜுனும் சாமந்தியும் அப்படி வேஷம் போட்டு நிற்பதாக சொல்ல அரசி டென்ஷன் ஆகிறாள். ஆனால் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருக்கிறாள்.
ராதாகிருஷ்ணன் ஆக இதுவரை காதலுடன் ஒருவரை பார்த்துக் கொள்ள இதை வந்தவர்கள் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். பிறகு அனைவரும் சாப்பிட உட்கார ராதா கிருஷ்ணனையும் அழைக்க இவர்களும் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட ஈஸ்வரி இதை வைத்து சாமந்தியை மிரட்ட சாமந்தி அவசரப்பட்டோமோ என பதறுகிறான். பிறகு அரசியின் தோழிகள் அர்ஜுன் சாமந்தியுடன் போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்ப அரசி மிகுந்த கோபத்துடன் வீட்டுக்குள் வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சாமந்தி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.