திரு கேட்ட கேள்வி.. உச்சகட்ட பதற்றத்தில் கவிதா - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்

Tamil TV Serials
By Tony Aug 31, 2026 11:30 AM GMT
Report

திருமாங்கல்யம்

 தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் திரு அவார்ட் பங்ஷன் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில் இன்று நடக்கப் பவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது கவிதா கௌதம் பார்த்து பேசிக்கொண்டிருக்கும் போது தாத்தா அந்த வழியாக வர கவிதா பதறிப்போய் கௌதமை ஓடி ஒளிந்து கொள்ள சொல்கிறாள். பிறகு கவிதாவை பார்த்து இங்கு என்னம்மா பண்ற என்று கேட்க போன் பேச வந்ததாக சொல்லி சமாளிக்கிறாள். அதன் பிறகு எல்லோரும் வீட்டுக்கு வர கவிதா தூங்கிக் கொண்டிருக்கும் போது திரு அந்த ஸ்கெட்ச்ல இருக்கிறது கௌதம் தானே..

திரு கேட்ட கேள்வி.. உச்சகட்ட பதற்றத்தில் கவிதா - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட் | Thirumangalyam Serial Today

அவன நீங்க தானே வேலைக்கு வச்சீங்க அப்போ உங்களுக்கு இதெல்லாம் தெரியும் தானே என்று கேள்வி மேல் கேள்வி கேட்க கவிதா பதறிப் போய் தூக்கத்திலிருந்து எழுகிறாள். இதே நேரத்தில் திருவிடம் இருந்து போன் கால் வர கவிதை போன் எடுக்க திரு அந்த ஸ்கெட்ச் ரெடியா என்று கேட்க மேலும் பதட்டம் அடைகிறாள். உடனே அந்த ஸ்கெட்ச் எடுத்து எரிக்க மகா இதை பார்த்து சந்தேகம் அடைகிறாள்.

பிறகு கௌதம் ரூமுக்கு வந்து கவிதாவிடம் அந்த ஸ்கெட்ச் பற்றி கேட்க அவள் தேடுவது போல நடிக்கிறாள். மேலும் வேறொரு உருவத்தை வரைந்து அதை ஓரிடத்தில் வைத்து இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.