சமந்தாவிடம் இருந்து நாகசைதன்யாவை பிரித்த 57 வயது நடிகர்.. பரபரப்பான தகவல்

Samantha Naga Chaitanya Aamir Khan
By Karthick Raja Jul 27, 2022 07:24 AM GMT
Report

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா இருவரும் தங்களுடைய விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இவர்களுடைய விவாகரத்துக்கு பல காரணங்கள் இதுவரை கூறப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் திரையுலக விமர்சகர் கமல் ஆர். கான் என்பவர் பரபரப்பூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 57 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் தான், சமந்தா - நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார். அதன்முழு விவரமும் தன்னிடம் இருப்பதாகவும் கமல் ஆர். கான் தெரிவித்துள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.