வேலையாட்களுக்கு 3 மாடி!! முகேஷ் அம்பானியின் 27 மாடி Antilia வீட்டில் இதெல்லாம் இருக்கா..
முகேஷ் அம்பானி குடும்பம்
பிரம்மாண்டத்திற்கு பேர் போன கோடிஸ்வரர்களிலேயே உலகம் வியந்து பார்க்ககூடியவர் தான் முகேஷ் அம்பானி. தன்னுடைய பிள்ளைகளின் திருமணத்தை உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு நடத்தி முடித்தார். அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு பின், அவர்கள் பற்றிய சிறு செய்திகள் கூட வைரலாகி வருகிறது.
அந்தவகையில், அம்பானி தன் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக இந்தியாவிலேயே முதல் புல்லட் ப்ரூஃப் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை 7.99 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கும் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட அண்டிலா வீடு பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Antilia
567 அடி கொண்ட இந்த வீட்டில், முதல் 6 மாடியில் கார் பார்க்கிங் இருப்பதாகவும், 7வது மாடியில் பார்ட்டி ஹாலும், 8 முதல் 12 மாடியில் ஸ்கை கார்டனும் இருக்கிறதாம். 13 மற்றும் 14வது மாடியில் ஜிம் ஒர்க்கவுட் இடமும், 15 -16 மாடியில் தனியார் மருத்துவமனையும் உள்ளதாம். 17 - 18 மாடியில் உயர்தர மீட்டிங் ரூமும் இருக்கிறதாம்.
19வது மாடியில் இருந்து 22வது மாடி வரை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அம்பானி வீட்டில் வேலை செய்யும் 600க்கும் மேற்பட்ட வேலையாட்களுக்காக 3 மாடி ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
மேலும் முகேஷ் அம்பானி, Iron Man டோனி ஸ்டார்க் ரசிகர் என்பதால் அவர் வீட்டில் இருக்கும் மாடலை அப்படியே ஒரு மாடியை வடிவமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், வெயில் காலங்களில் வெப்பத்தை தாங்க அதற்கான ஒரு பனி பொழிவு கொண்ட ஒரு இடத்தை செயற்கையாக உருவாக்கி இருக்கிறார் முகேஷ் அம்பானி.