பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரனாடா நீ.. சொல்லவே இல்ல - புகைப்படத்துடன் இதோ
பிக் பாஸ் சீசன் 5 கடந்த வாரம் முதல் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி, சூடு பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த வாரம் துவக்கத்திலேயே நாமினேஷன் சுற்றில் மாபெரும் சண்டை வெடித்தது.
இதன்பின் தற்போது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில், வீட்டை விட்டு வெளியேற விரும்பும் நபர்கள் இந்த 3 லட்சம் பணத்துடன் வெளியேறலாம் என்று பிக் பாஸ் அப்பேர்ச்சுநட்டி கொடுத்துள்ளார். அந்த 3 லட்சம் பணத்தை சரத்குமார் பிக் பாஸ் வீட்டிற்குள் எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த பிக் பாஸ் குரலில் பேசி வரும் நபர் யார், அவர் எப்படி இருப்பார் என்று இதுவரை யாருக்குமே தெரியாது. ஆனால், முதல் முறையாக அவருடைய உருவத்துடன் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக்பாஸாக பேசி வருவது சாஷோ சதீஷ் சாரதி என்பவர் தானாம். அவருடைய புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அவருடைய புகைப்படம்..
