எதிர்பார்க்காத பிக் பாஸ் எலிமினேஷன்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்
பிக் பாஸ் 8ல் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடந்துள்ளது. ஆம், இந்த சீசனில் மட்டுமே ஐந்து முறை டபுள் எலிமினேஷன் நடைபெற்றுள்ளது.
இந்த வாரம் வெளியேறிய இரண்டு நபர்களில் முதல் ஆளாக அருண் தான் உள்ளார். ஆம், பிக் பாஸ் 8ல் இருந்த இந்த வாரம் முதல் நபராக அருண் வெளியேறியுள்ளார்.
இவரை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத ஒருவராக, தீபக் வெளியேற்றப்பட்டுள்ளார். பைனலில் வருவார் என ரசிகர்களால் எதிர்பார்த்த நிலையில், தீபக் வெளியேறியுள்ளது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது.
இதனால் இந்த எலிமினேஷன் Unfair ஆனது என கூறி, தங்களது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
இவர்கள் இருவரும் வெளியேறியுள்ள நிலையில் தற்போது முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, ரயான் மற்றும் பவித்ரா ஆகியோர் இறுதிக்கட்டத்திற்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.