தியேட்டரில் அட்டர் பிளாப் ஆன தக் லைஃப் படம்.. OTT தளத்தில் செய்த தரமான சம்பவம்!
தக் லைஃப்
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. கமல், சிம்பு, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதில், கமல்ஹாசன் த்ரிஷா உடன் ரொமான்ஸ் செய்த காட்சிகள் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது.
இதனால் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளியான இப்படம் கடுமையான விமர்சனங்களும், நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும் வந்தனர்.
தரமான சம்பவம்
ஆனால், நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியான இப்படம் முதல் வாரத்தில் 24 லட்சம் பார்வைகளை பெற்று இந்திய அளவில் OTT -யில் அதிக வியூஸ் அள்ளிய படங்களின் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்திருந்தது.
இரண்டாம் வாரத்தில் அதைவிட கூடுதலாக வியூஸ் அள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது தக் லைஃப் திரைப்படம். ஜூலை 7ந் தேதி முதல் 13ந் தேதி வரை இப்படத்திற்கு 33 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்றாலும் OTT தளத்தில் நல்ல வியூஸ் பெற்றுள்ளது.