பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்ட துணிவு பட நடிகர்.. வெளியான அதிர்ச்சி சம்பவம்

Thunivu
By Dhiviyarajan Jan 27, 2023 02:21 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

டான்சர் ரமேஷ்

டிக் டாக், ரீல்ஸ் போன்றவற்றில் தனது நடன திறமையை வெளிப்படுத்தி பிரபலமானவர் டான்சர் ரமேஷ். சில மாதங்களுக்கு முன்பு  பேட்டி ஒன்றில், "எனக்கு திறமை இருந்தும் எந்த படத்திலும் வாய்ப்பு கிடைக்க வில்லை. என் குடும்பத்தார் தான் என்னைபார்த்து கொள்கிறார்கள். எனக்கு புதிய துணிமணிகள் கூட இல்லை"  என்று தனது சோகத்தை பகிர்ந்திருந்தார். இதை பார்த்த பலரும் இவருக்கு ஆறுதல் கூறினார்கள்.

பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்ட துணிவு பட நடிகர்.. வெளியான அதிர்ச்சி சம்பவம் | Thunivu Movie Actor Passed Away

தற்கொலை

டான்சர் ரமேஷுக்கு குடி பழக்கம் அதிகம் இருப்பதால் அவரின் இரண்டு மனைவிகளிடம் சண்டை போடுவதாக தகவல் ஒன்று வெளியானது. அவர் முதல் மனைவி வீட்டில் சென்று தங்கிவிட்டதால் அவரை காணவில்லை என இரண்டாம் மனைவி போலீஸில் புகார் அளித்து இருந்தது சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில் டான்சர் ரமேஷ் இன்று அவரது பிறந்தநாள் அன்று 10-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சமீபத்தில் இவர் அஜித்தின் துணிவு படத்திலும், ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்ட துணிவு பட நடிகர்.. வெளியான அதிர்ச்சி சம்பவம் | Thunivu Movie Actor Passed Away