அஜித், நயன்தாரா இப்படியே இருந்தால் காணாமல் போய்விடுவார்கள்... பிரபலம் அதிரடி
Ajith Kumar
Nayanthara
Tamil Cinema
Tirupur Subramaniam
By Yathrika
அஜித்-நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அஜித் உள்ளார், அதேபோல் லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா கலக்கி வருகிறார்.
இவர்கள் இருவரும் சினிமாவில் ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள், அது என்னவென்றால் தாங்கள் நடிக்கும் படங்களின் புரொமோஷனுக்கு வருவதில்லை. அஜித் சுத்தமாக வருவதில்லை, ஆனால் நயன்தாரா அவ்வப்போது தான் தயாரிக்கும் படங்களுக்காக புரொமோஷனில் கலந்துகொள்கிறார்.

கடைசியாக வெளியான மூக்குத்தி அம்மன் படத்திற்கு அவர் புரொமோஷன் செய்யவில்லை, ஆனால் அதற்கு முன் நடித்த ஹாய் படத்திற்கு பேட்டிகள் கொடுத்துள்ளார்.
இவர்கள் இப்படியே புரொமோஷன்களுக்கு வராமல் இருப்பதால் அவர்கள் தலையில் ஏதோ கிரீடம் இருப்பதாக நினைக்கிறார்கள், இப்படியே இருந்தால் காணாமல் போவார்கள் என திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி கொடுத்துள்ளார்.