பிக் பாஸ் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
Bigg Boss
Bigg Boss Tamil 8
MuthuKumaran Jegatheesan
By Kathick
பிக் பாஸ் 8ன் பைனல் நாளை ஒளிபரப்பாகவுள்ளது. ஆனால், தற்போதே அதற்கான ரிசல்ட் வெளிவந்துவிட்டது. முத்துக்குமரன் தான் பிக் பாஸ் 8ன் வெற்றியாளர் என தகவல் தெரிந்துவிட்டது.
வெற்றியாளராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்துக்குமரன், கோப்பையுடன் சேர்த்து ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசு தொகையையும் வென்றுள்ளாராம்.
டைட்டில் வின்னர் ஆகியுள்ள முத்துக்குமரன், பிக் பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்துள்ளார். இந்த நிலையில், இதற்காக முத்துக்குமரன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 105 நாட்கள் வீட்டிற்குள் இருந்த முத்துக்குமரன், ஒரு நாளை ரூ. 10 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளாராம். ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் என்கிற கணக்கில், 105 நாட்களுக்கு ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் கூறுகின்றனர்.