63 வயதில் 4வது திருமணத்திற்கு ரெடியான டாம் க்ரூஸ்.. விண்வெளியில் அனா டி அர்மாஸ் உடன் கல்யாணம்
உலகளவில் புகழ்பெற்ற நடிகர் டாம் க்ரூஸ். இவர் பிரபல ஹாலிவுட் நடிகை அனா டி அர்மாஸ் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஒன்றாக சுற்றி திரியும் புகைப்படங்கள் வைரலானது.
இந்த நிலையில், இவர்களுடைய திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. டாம் க்ரூஸ் மற்றும் அனா டி அர்மஸ் தங்களது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர். விண்வெளியில் தங்களது திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளார்களாம். இதன்மூலம், விண்வெளியில் திருமணம் செய்துகொள்ளும் முதல் ஜோடி என்கிற பெருமையை பெற டாம் க்ரூஸ் ஆர்வமாக இருக்கிறாராம்.
நடிகர் டாம் க்ரூஸ் கடந்த 1987ஆம் ஆண்டு Mimi Rogers என்பவரை திருமணம் செய்துகொண்டார். மூன்று ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்த இவர்கள், 1990ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் பிரபல நடிகை Nicole Kidman என்பவர் 1990ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் 2001ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் 2006ஆம் ஆண்டு டாம் க்ரூஸை Katie Holmes என்பவர் மணந்தார். பின் இருவரும் 2012ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.
இதன்மூலம் தற்போது டாம் க்ரூஸுக்கு நடக்கவிருப்பது நான்காவது திருமணம் ஆகும். மேலும் நடிகை அனா டி அர்மஸ் 2011 Marc Clotet என்பவர் திருமணம் செய்துகொண்டார். பின் 2013ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.