உலகின் பணக்கார குடும்பங்கள்!! அம்பானி குடும்பம் எந்த இடம் தெரியுமா?
உலகமே வியந்து பார்க்கும்படியான தனது மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தி முடித்தார் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியினர்.
பல ஆயிரம் கோடி செலவில் நடந்த இத்திருமணத்திற்கு பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் உலகின் மிகவும் பணக்கார குடும்பங்கள் பட்டியல் யார் யார் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
TOP 10
அதில், முதல் இடத்தில் வால்டன் குடும்பத்தினர் பிடித்துள்ளனர். சூப்பர் மார்க்கெட் சங்கிலி நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 46 சதவீதம் இவர்களின் குடும்பத்தினர் சொந்தமாக வைத்து 432 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பினை பிடித்து அமெரிக்காவில் இருந்து வருகிறார்கள்.
அவர்களுக்கு அடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின், அல் நஹ்யான் குடும்பம் - 323 பில்லியன் அமெரிக்க டாலருடன் 2வது இடமும், கத்தாரை சேர்ந்த அல் தானி குடும்பம் 172 பில்லியன் அமெரிக்க டாலருடன் 3வது இடத்திலும், பிரான்ஸை சேர்ந்த ஹெர்ம்ஸ் குடும்பத்தினர் 170 பில்லியன் டாலருடன் 4வது இடத்திலும், அமெரிக்காவின் கோச் குடும்பத்தினர் 148 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 5வது இடத்திலும் இருந்து வருகிறார்கள்.
செளதி அரேபியாவை சேர்ந்த அல் செளத் குடும்பத்தினர் 140 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 6வது இடத்திலும், அமெரிக்காவின் மார்ஸ் குடும்பத்தினர் 133 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 7வது இடத்திலும் இருந்து வருகிறார்கள்.
8வது இடத்தில் அம்பானி குடும்பம்
இவர்களை அடுத்த இந்தியாவை சேர்ந்த அம்பானி குடும்பத்தினர் 99 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 8வது இடத்தினை பிரித்துள்ளனர்.
அவர்கலுக்கு பின் வெர்தெய்மர் குடும்பம் 88 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 9வது இடமும், தாம்சன் குடும்பத்தினர் 87 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 10வது இடத்திலும் இருந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.