இந்தியாவின் டாப் 5 பணக்கார யூடியூபர்கள்!! யார் யார் தெரியுமா?

Youtube India Social Media Life Style Entertainment
By Edward Feb 21, 2026 11:30 AM GMT
Report

சினிமா மற்றும் விளையாட்டு தொடர்பாக இருக்கும் பிரபலங்கள் தான் பல கோடியில் சொத்து வைத்து கோடிஸ்வரர்கள் ஆவார்கள். ஆனால் தற்போதைய நவீனகாலத்தில் யூடியூப் மூலம் பல பிரபலங்கள் சம்பாதித்து கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறார்கள்.

இந்தியாவின் டாப் 5 பணக்கார யூடியூபர்கள்!! யார் யார் தெரியுமா? | Top 5 Richest Youtubers In India No1 Tanmay Bhat

அப்படி இந்தியாவில் டாப் 5 பணக்கார யூடியூபர்கள் யார் யார் என்ற தகவல் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

டாப் 5 பணக்கார யூடியூபர்கள்

BB Ki Vines என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் புவன் பாம், சுமார் 26.6 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 122 கோடியை வைத்துக்கொண்டு 5வது இடத்தில் இருக்கிறார்.

இந்தியாவின் டாப் 5 பணக்கார யூடியூபர்கள்!! யார் யார் தெரியுமா? | Top 5 Richest Youtubers In India No1 Tanmay Bhat

அவரை தொடர்ந்து, CarryMinati என்ற யூடியூப் சேனலை நடத்தும் கேரி மினாட்டி 4வது இடத்தில் இருக்கிறார். 45.3 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துக்கொண்டு சுமார் ரூ. 131 கோடி சொத்தை வைத்துள்ளார்.

இவருக்கு பின் 3வது இடத்தில் Samay Raina என்ற யூடியூப் சேனலை வைத்துள்ள சமய் ரெய்னா என்பவர் சுமார் 7.37 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 140 கோடி ரூபாயாம்.

இந்தியாவின் டாப் 5 பணக்கார யூடியூபர்கள்!! யார் யார் தெரியுமா? | Top 5 Richest Youtubers In India No1 Tanmay Bhat

2வது இடத்தில் Technical Guruji, Gaurav Chaudhary மற்றும் TG Shorts என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் கெளரவ் சவுத்ரி, சுமார் 356 கோடி சொத்து மதிப்பினை வைத்திருக்கிறார்.

இந்தியாவின் டாப் 5 பணக்கார யூடியூபர்களின் பட்டியலில் முதலிடத்தில் தன்மய் பட் உள்ளார். Tanmay Bhat என்ற யூடியூப் சேனல் மூலம் சுமார் ரூ. 665 கோடி சொத்து மதிப்பினை வைத்திருக்கிறாராம்.