திருமாங்கல்யம் சீரியல் அப்டேட்: வருணை பளார் என அறைந்த மகா... காஞ்சனாவுக்கு வந்த சந்தேகம்!
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘திருமாங்கல்யம்’ சீரியலில், மகா மற்றும் வருணுக்கு இடையே நடக்கும் சண்டைகள் ரசிகர்களை ரசிக்க வைக்கின்றன. அந்த வகையில், இன்றைய எபிசோடில் மகா வருணை அறைய, அதைப் பார்த்த காஞ்சனாவுக்கு ஒரு சந்தேகம் வருகிறது.
டைரியால் வந்த பிரச்சினை!
வருண், மகாவின் அம்மா எழுதிய பழைய டைரியை ஆர்வமாகப் படித்துக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்த மகா, “அதைப் படிக்காதீங்க, என்கிட்ட கொடுங்க” என்று கேட்கிறாள். ஆனால் வருணோ, “உங்க அம்மா ரொம்ப திரில்லிங்கா எழுதியிருக்காங்க. இதெல்லாம் என்னால கொடுக்க முடியாது” என்று அவளை வெறுப்பேற்றுகிறான்.
ஒரு கட்டத்தில் டைரியைக் கீழே போடுவது போல வருண் நடிக்க, கோபத்தின் உச்சிக்கே சென்ற மகா அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்துவிடுகிறாள்.
மகா அடித்ததைப் பார்த்த காஞ்சனா!
மகா வருணை அறைந்ததைத் தூரத்திலிருந்து பார்த்துவிடுகிறாள் காஞ்சனா. உடனே கவிதாவிடம் சென்று, “மகா அவ புருஷனை அடிச்சிட்டா!” என்று அதிர்ச்சியுடன் சொல்கிறாள்.
ஆனால் கவிதாவோ, “மகாவுக்கு அவ புருஷன்னா தெய்வம் மாதிரி. அவ எப்படி அடிப்பா? அப்படியெல்லாம் இருக்காது” என்று நம்ப மறுக்கிறாள். ஆனாலும் காஞ்சனாவுக்கு சந்தேகம் தீரவில்லை. அதனால் மகாவிடமே நேரில் போய்க் கேட்க முடிவு செய்கிறாள்.

மன்னிப்பு கேட்கப் போன மகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
வருணை அடித்துவிட்டோமே என்ற வருத்தத்தில், அவனிடம் மன்னிப்புக் கேட்பதற்காக அவனது அறைக்குச் செல்கிறாள் மகா. அங்கே வருண் அழுவது போல நடிக்க, பதறிப்போன மகா, “சாரி, நான் அடிச்சிருக்கக் கூடாது. அழாதீங்க” என்று சமாதானப்படுத்துகிறாள்.
உடனே வருண், “யாரு அழுதது? முதல்ல ஜிம்முக்குப் போய் உடம்பை ஏத்து. உன் கை பஞ்சு மாதிரி இருக்கு. நீ அடிச்சது எனக்கு வலிக்கவே இல்லை!” என்று மகாவைக் கலாய்க்கிறான்.
அப்போது அங்கு வரும் கிளியும் வருணுடன் சேர்ந்து மகாவை வம்பிழுத்துவிட்டுப் பறந்து செல்கிறது. இதனால் கடுப்பான மகா, “நீ திருந்தவே மாட்ட!” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குச் சென்றுவிடுகிறாள்.

ரீல்ஸ் எடுக்கத்தான் அடித்தாளா? வருணின் புது பிளான்!
கிச்சனில் மகா யோசித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வரும் கிளி மீண்டும் அவளைக் கலாய்க்கிறது. இதற்கிடையில் காஞ்சனாவும் கவிதாவும் வந்து, “எதுக்கு உன் புருஷனை அடிச்ச?” என்று நேரடியாகக் கேட்கின்றனர்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மகா தவித்துக் கொண்டிருக்கும்போது, சரியாக அங்கு வந்து சேர்கிறான் வருண்.
உடனே அவன், “என்னங்க, உங்களுக்கு ரீல்ஸ் பத்தி எதுவுமே தெரியாதா? நான்தான் மகாவை அடிக்கச் சொன்னேன். இப்போ எங்களோட வீடியோக்களுக்கு லைக்ஸே வர்றதில்லை. அதான் பொண்டாட்டி புருஷனை அடிக்கிற மாதிரி ஒரு கன்டென்ட் எடுத்து ரீல்ஸ் போட்டோம்” என்று சமாளிக்கிறான்.
அதுமட்டுமில்லாமல், மகா தன்னை அடித்த வீடியோவையும் அவர்களிடம் போட்டுக் காட்டுகிறான். இதைக் கேட்ட காஞ்சனாவும் கவிதாவும் என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்துப் போகின்றனர்.
இப்படியாக மகாவையும் வருணையும் சுற்றிப் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? காஞ்சனாவுக்கு மகா மீது மீண்டும் சந்தேகம் வருமா? என்பதைத் தெரிந்துகொள்ள திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.