அவளுக்கு அதுமட்டும் எப்படி நடக்குது! புலம்பும் பிரபல வாரிசு நடிகரின் 2வது மகள்..
தமிழ் சினிமாவில் 60 வயதினை எட்டி உச்ச நட்சத்திரமாக இருக்கும் அந்த நடிகரின் இரு பெண் வாரிசும் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகினார்கள். மூத்த மகள் எப்படியாவது பிழைத்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க வைத்தார்.
க்ளாமரில், பேமிலி கேர்ல் ரோலும் அம்மணிக்கு சிறப்பாக ஒற்றுப்போனதால் முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தையும் பெற்று வருகிறார் மூத்த மகள். தற்போது அப்பாவையே கண்டுக்கொள்ளாமல் தன் வேலையுண்டு என்று இருக்கிறார்.
இடையில் காதலில் மூழ்கி தனிமையில் காதலருடன் வசித்தும் அவருடன் பார்ட்டி, கிளப் பாடல் கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார் அக்கா நடிகை. இதெல்லாம் அக்காவுக்கு மட்டும் எப்படி காதலும் படமும் ஒர்க் கவுட் ஆகிறது என்று இரண்டாம் மகள் புலம்பி வருகிறாராம்.
முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் எந்த பயனும் கிடைக்காமல் ஒதுக்கப்பட்டு தான் வருகிறார். க்ளாமர் போட்டோஷூட் போட்டும் எதுவும் செட்டாகாத அம்மணி பெண்கள் சமாச்சாரத்தை வைத்து எடுத்த படத்திலும் நடித்தார்.
அப்படமும் ஓடிடி தளத்தில் வெற்றி பெறாமல் அம்மணிக்கு தோல்வியையே கொடுத்தது. இப்படியொரு விரக்தியில் இருந்த அம்மணி ஒரு கட்டத்தில் படமே வேண்டாம் என்று வாய்ப்புகளை உதறித்தள்ளி வருகிறாராம்.