நடிகை மீனாவை கொல்ல துடித்த சீரியல் நடிகை? உண்மையை உடைத்த சீரியல் நடிகை
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பின் ஹீரோயின் அவதாரம் எடுத்தவர் நடிகை மீனா. தென்னிந்திய சினிமாவின் கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்த மீனா வித்யாசாகர் என்பவரை 2009ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் நடித்து வந்த மீனா தனக்கு பின் தன் மகள் நைனிகாவையும் தெறி படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தார். கணவரின் அனுமதியுடன் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வந்த மீனா அண்ணாத்த படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு நட்சத்திரங்களில் பல ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் மீனா பற்றி பலர் அவர்களது அனுபவங்களை பகிர்ந்து வருவதுண்டு.

அப்படி அவருடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்த சோனியா போஸ் மீனா குறித்த சில விசயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் போது மீனாவை கழுத்தை நெறித்து கொண்ணுலாம் போலத்தோணும்.
மீனாவை பார்க்கும்போது அப்படி பொறாமையா இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதை காமெடியாக கூறினாலும் சின்ன வயதில் அப்படியொரு கோபத்தில் இருப்பதை ஓப்பனாக மீடியாவில் கூறியது ஷாக் கொடுத்துள்ளது.
சோனியா போஸ் தற்போது சீரியல்களில் நடித்து வந்தாலும் தன்னுடைய 2 வயதிலேயே குட்டி நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். ஒரு மலையாள படத்திற்காக குட்டி நட்சத்திரத்திற்கான தேசிய விருதினையும் பெற்றார்.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க