63 வயதை எட்டிய ராதிகா.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒன்றுகூடிய டாப் நடிகைகள்
ராதிகா சரத்குமார்
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை ராதிகா சரத்குமார். எம்.ஆர்.ராதா அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தார்.
கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க அடுத்தடுத்து ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
சீரியலில் கலக்கிய ராதிகா இப்போது படங்களில் அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். ராதிகா நேற்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதற்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர்.
ஒன்றுகூடிய நடிகைகள்
இந்நிலையில், ராதிகா சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகைகள் த்ரிஷா, மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்களை நடிகை மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,