இரட்டை குழந்தை பெற்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் வீட்டுக்கு சென்ற பிரபல நடிகை..

Nayanthara Radhika Sarathkumar Vignesh Shivan
By Edward Nov 17, 2022 03:45 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. கடந்த 7 ஆண்டுகளாக நானும் ரவுடி தான் படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

அதன்பின் கடந்த ஜூன் 9 ஆம் தேதி இருவரும் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்து வந்த நயன் தாரா வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றதாக விக்னேஷ் சிவன் புகைப்படத்துடன் வெளியிட்டார்.

இரட்டை குழந்தை பெற்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் வீட்டுக்கு சென்ற பிரபல நடிகை.. | Top Actress Visit Nayanthara Vignesh Shivan House

இந்த விசயம் பெரியலவில் வைரலாகி பரப்பாகியது. மேலும் சிக்கலில் சிக்கி அதிலிருந்து நயன் தாரா - விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்து சகஜமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகை, தல தீபாவளி என்று கொண்டாடிய தம்பதியினரை பார்க்க திடீர் விசுட் அடித்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.

மூத்த நடிகராக திகழ்ந்து வரும் நடிகை ராதிகா நானும் ரவுடி தான் படத்தில் இருவருடனும் பணியாற்றியிருக்கிறார். அதற்காகவும் குழந்தைகளை பார்க்கவும் ராதிகா நயன் - விக்னேஷ் குழந்தைகளை பார்த்து புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.