போட்டியாளர்களை பிச்சை எடுக்க வைத்த வெங்கடேஷ் பட்!! டாப் குக் டூப் குக்கில் நடந்த அலப்பரை..

Viral Video Sun TV Aishwarya Dutta
By Edward Jul 16, 2024 01:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது சீசன் 5 ஆரம்பிக்கப்பட்டு ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் மீடியா மேசன்ஸ் சார்ப்பில் இருந்ததால், விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு மாறினார். சன் தொலைக்காட்சியில் டாப் குக் டூப் குக் என்ற பெயரில் சமையல் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

போட்டியாளர்களை பிச்சை எடுக்க வைத்த வெங்கடேஷ் பட்!! டாப் குக் டூப் குக்கில் நடந்த அலப்பரை.. | Top Cook Dupe Cook Promo 3 Video Viral Aishwarya

பல பிரபலங்கள் குக்காகவும், டூப்பாகவும் கலந்து கொண்டு வருகிறார்கள். இந்த வார நிகழ்ச்சியின் பிரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு டாஸ்க் செய்ய போட்டியாளர்களை வெங்கடேஷ் பட் பிச்சை எடுக்க வைத்திருக்கிறார்.

அதில் நடிகை ஐஸ்வர்யா தத்தா தலையை பிடித்துக்கொண்டு ஜெஞ்சியபடி பிச்சை எடுத்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.