பிரம்மாண்டமாக துவங்கும் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. புதிய 8 போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ

Sun TV Venkatesh Bhat
By Kathick Aug 11, 2025 07:30 AM GMT
Report

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய செஃப் வெங்கடேஷ் பட் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் நடுவாரானார். கடந்த ஆண்டு துவங்கிய இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

முதல் சீசன் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது சீசன் எப்போது என்கிற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். இந்நிலையில், டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது.

பிரம்மாண்டமாக துவங்கும் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. புதிய 8 போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ | Top Cooku Dupe Cooku 2 Contestants List

வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி முதல் சன் தொலைக்காட்சியில் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 ஒளிபரப்பாக உள்ளது. சிவாங்கி இந்த சீசனில் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது.

சீரியல் நடிகை டெலனா, ஷிவானி நாராயணன், ராப் பாடகர் வஹீசன், நடிகை ப்ரீத்தா, நடிகர் ரோபோ ஷங்கர், நடிகை கிரண், நடிகை பிரியங்கா மற்றும் நடிகர் பெசன்ட் ரவி ஆகிய 8 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.