டாப் குக்கு டூப் குக்கு 2டைட்டில் வின்னரான பெசன்ட் ரவி!! என்னென்ன பரிசு தெரியுமா?
டாப் குக்கு டூப் குக்கு 2
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் கவனத்தையும் ஈர்த்து வரும் நிகழ்ச்சி தான் டாப் குக்கு டூப் குக்கு. சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் நடந்து முடிந்தது.
முதல் சீசனில் நரேந்திர பிரசாத்(NP) மற்றும் சுஜாதா ஆகியோர் வெற்றிப்பெற்றனர். இதனையடுத்து டாப் குக்கு டூப் குக்கு 2வது சீசனில், பெசன்ட் ரவி, ப்ரீத்தா, வாஹீசன், டெல்னா, கிரண் ஆகியோர் இறுதி சுற்றில் போட்டிப்போட்டனர்.

பெசன்ட் ரவி
விறுவிறுப்பாக சென்ற இறுதி சுற்று போட்டியில் சிறப்பாக சமைத்து டாப் குக்கு டூப் குக்கு 2வின் டைட்டில் வின்னராக பெசன்ட் ரவி கைப்பற்றினார்.
சென்னையில் ஏற்கனவே ஒரு ஹோட்டலை நடத்தி வரும் பெசன்ட் ரவிக்கு ஸ்டார் ஆஃப் சீசன் 2 என்ற பட்டமும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோ பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இறுதி சுற்றில் பெசன்ட் ரவியுடன் டூப் குக்காக இருந்த KPY தீனாவுக்கு 43 இன்ச் டிவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.