டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2!! டைட்டில் வின்னர் இவர்தானா? வைரலாகும் வீடியோ..

Kiran Rathod Sivaangi Krishnakumar Sun TV Venkatesh Bhat Top Cooku Dupe Cooku
By Edward Dec 13, 2025 06:30 AM GMT
Report

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் டாப் குக்கு டூப் குக்கு. இந்நிகழ்ச்சியின் சீசன் 2 கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கியது. சிவாங்கி, ராகேஷ் இருவரும் தொகுத்து வழங்க, செஃப் வெங்கடேஷ் பட், செஃப் ராம் மோகன் இருவரும் நடுவராக பணியாற்றியிருக்கிறார்கள்.

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2!! டைட்டில் வின்னர் இவர்தானா? வைரலாகும் வீடியோ.. | Top Cooku Dupe Cooku Season 2 Grand Finale Who

ரோபோ ஷங்கர், நடிகை பிரியங்கா, TSR, ஷிவானி, கிரண், வாஹீசன், ப்ரீத்தா, டெல்னா, பெசன்ட் ரவி உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இறுதி சுற்று போட்டியாளர்களாக பெசன்ட் ரவி, டெல்னா, ப்ரீத்தா, வாஹீசன், கிரண் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்தவாரம் ஞாயிற்று கிழமை Top Cooku Dupe Cooku Season 2வின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவுள்ளது. தற்போது கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் யார் Top Cooku Dupe Cooku Season 2ன் டைட்டில் வின்னர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2!! டைட்டில் வின்னர் இவர்தானா? வைரலாகும் வீடியோ.. | Top Cooku Dupe Cooku Season 2 Grand Finale Who

டைட்டில் வின்னர்

அந்தவகையில் முதல் இறுதி சுற்று போட்டியாளராக தேர்வு செய்யப்பட்ட பெசன்ட் ரவி தான் Top Cooku Dupe Cooku Season 2-ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாராம்.

இறுதி சுற்று போட்டியில் சிறப்பாக சமைத்து நடுவர்களின் மனதை ஈர்த்து டைட்டில் வின்னராகியிருக்கிறார் பெசன்ட் ரவி. இவருக்கு அடுத்தபடியான முதல் ரன்னர் அப் இடத்தினை ப்ரீத்தா பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2!! டைட்டில் வின்னர் இவர்தானா? வைரலாகும் வீடியோ.. | Top Cooku Dupe Cooku Season 2 Grand Finale Who

இதன் அதிகாரப்பூர்வ தகவல் நாளை ஞாயிற்று கிழமை ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் தான் யார் டைட்டில் வின்னர் என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.