திருமணமாகி ஒருசில வருஷத்தில் விவாகரத்து செய்த தொகுப்பாளினிகள்!! கணவர் பக்கமே போகாத VJ பிரியங்கா
சின்னத்திரை தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி அனைவரையும் தன் பேச்சால் ஈர்த்து வருபவர் பலர் இருக்கிறார்கள். அப்படி தொகுப்பாளினிகள் திருமணத்திற்கு பின்பும் அந்த வேலையை ஒருசிலர் செய்து வருகிறார்கள். சிலர் கணவரை விவாகரத்து செய்து அந்த வேலையை பார்த்து வருகிறார்கள். அப்படி விஜேவாக இருந்து விவாகரத்து செய்த தொகுப்பாளினிகள் யார் என்பதை பார்ப்போம்.
விஜே டிடி
ஸ்டார் விஜய் டிவியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜே-வாக பணியாற்றி வரும் விஜே டிடி என்கிற திவ்யதர்ஷினி கடந்த 2014ல் ஸ்ரீகாந்த் ரவிசந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி மூன்றே ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ல் விவாகரத்து செய்துவிட்டார் டிடி. அதன்பின் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்தும் வருகிறார்.
விஜே ரம்யா
விஜய் தொலைக்காட்சியில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்து விஜே வாகவும் மற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார் விஜே ரம்யா. கடந்த 2014ல் அப்ரஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய ஒரே ஆண்டில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2015ல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
விஜே மகேஸ்வரி
பல தொலைக்காட்சி சேனல்களில் விஜேவாக பணியாற்றி பிரபலமான விஜே மகேஸ்வரி 2005 சாணக்யா என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்றார். மகன் இருக்கும் நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 5 ஆண்டுகள் கழித்து 2010ல் கணவரை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார் விஜே மகேஸ்வரி.
விஜே பிரியங்கா
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜே பிரியங்கா 2016ல் பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் விஜே வேலையை பார்த்து வரும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கணவரை பற்றி எங்கும் வாய்த்திறக்கவில்லை. இதனால் விஜே பிரியங்கா கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று செய்திகள் வெளியானது. இதுகுறித்து பிரியங்கா எங்கும் வாய்த்திறக்காமல் இருந்து வருகிறார்.