அட்ஜெஸ்ட்மெண்ட் இல்லன்னா வாய்ப்பு இல்லையா? டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை யோகலட்சுமி பதில்..

Gossip Today Tamil Actress Actress Tourist Family
By Edward Jun 09, 2025 05:30 AM GMT
Report

டூரிஸ்ட் ஃபேமிலி

சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. 24 வயதான அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகிய இப்படம் வெளியாகி ரூ. 75 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்த நடிகை யோகலட்சுமி, அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேட்டியொன்றில் பேசியுள்ளார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் இல்லன்னா வாய்ப்பு இல்லையா? டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை யோகலட்சுமி பதில்.. | Tourist Family Actress Yogalakshmi Open Adjustment

யோகலட்சுமி

அதில் சினிமாவில் பெண்களுக்கு சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. நாம் நடந்துக்கொள்வது, நாம் எதிர்கொள்வது என்ற ஒன்று இருக்கிறது. அதுதான் இத்துறையில் ரொம்ப முக்கியமாக நினைக்கிறேன். சிலர் வந்து அப்படி தவறாக கேட்டாலும் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியேத்தான் இருக்க வேண்டும்.

உங்களுக்கு அது வேண்டும் என்றால் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. வேண்டாம் என்று உறுதியோடு முடிவெடுத்துவிட்டால் அந்த உறுதியான முடிவில் தான் இருக்க வேண்டும். அது இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும்.

அட்ஜெஸ்ட்மெண்ட் இல்லன்னா வாய்ப்பு இல்லையா? டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை யோகலட்சுமி பதில்.. | Tourist Family Actress Yogalakshmi Open Adjustment

அந்த வாய்ப்பு வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவெடுப்பது சம்பந்தப்பட்டவரின் தனிப்பட்ட உரிமை. நாம் இருப்பதை பொறுத்துதான் அனைத்தும் இருக்கிறது. வேண்டாம் என்றால் வேண்டாம் தான். அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று நடிகை யோகலட்சுமி அட்ஜெஸ்ட்மெண்ட் நடப்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.