இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவையில் இணைந்த முதல் திருநங்கை நடிகை..

Trisha Gossip Today Tamil Actress TVK
By Jai Nov 25, 2026 01:12 PM GMT
Report

நடிகை திரிஷா பெயரில் திருநெல்வேலியில் இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை என்ற புதிய நற்பணி இயக்கம் சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில், திருநங்கையும் நடிகையுமான விஜே வைஷு, முதல் ஆளாக இணைந்துள்ளார்.

இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவையில் இணைந்த முதல் திருநங்கை நடிகை.. | Transgender Vaishu Joins Thalaivi Trisha Peravai

இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை

திருநெல்வேலி தச்சநல்லூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜகோபால் என்பவர் நட்கை திரிஷா பெயரில் இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை என்ற நற்பணி இயக்கத்தை சில நாட்களுக்கு முன் தொடங்கியிருக்கிறார். இப்பேரவை மூலம், ஏழை, எளிய மக்களுக்கு தேவையான பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

சட்ட உதவிகள் தேவைப்படும் சமானிய மக்களுக்கு இலவசமாக வழக்கறிஞர்களை நியமித்து உதவவும் திட்டமிட்டுள்ளனர். தவெக தலைவர் விஜய்யுடன் இணைந்து திரிஷா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது என்று ராஜகோபால் பேசியிருந்தார்.

இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவையில் இணைந்த முதல் திருநங்கை நடிகை.. | Transgender Vaishu Joins Thalaivi Trisha Peravai

இந்நிலையில் திருநங்கையும் நடிகையுமான விஜே வைஷு, திரிஷா பேரவையில் இணைந்துள்ளதாக கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

விஜே வைஷு

திரிஷாவுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து, பேரவையில் இணையப் பெருமையுடன் தயாராக இருக்கிறேன். நெல்லையில் தொடங்கும் இந்தப் புதிய பயணத்தில், திரிஷா அவர்களுக்கு எனது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கி, உங்களுடன் இணைந்து முன்னேற உறுதியுடன் பயணிக்கிறேன். இது ஒரு புதிய தொடக்கம் மட்டுமல்ல, என் பொறுப்பின் தொடக்கமும் கூட! என்று கூறியும் இருக்கிறார்.