மீண்டும் டிரண்ட்டாகும் திரிஷா - விஜய் விமான பேசஞ்சர் லிஸ்ட்!! உண்மையா?
திரிஷா - விஜய்
நடிகர் விஜய் - நடிகை திரிஷா இடையேயான உறவு குறித்து பல வதந்திகள் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் நடைபெற்றது.

இதற்காக நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் தனி சார்ட்டர்டு விமானத்தில் சென்னையில் இருந்து கோவாவுக்கு ஒன்றாக சென்றதாக கூறப்படுகிறது.
பேசஞ்சர் லிஸ்ட்
அப்போது அவர்கள் எடுத்த புகைப்படங்கள் என்று கூறி புகைப்படங்களும் இணையத்தில் பரவியதோடு, அவர்கள் விமான டிக்கெட்டின் பேசஞ்சார் லிஸ்ட் இணையத்தில் பரவியது.

அப்போது அந்த பேசஞ்ச்ர் லிஸ்ட் இனையத்தில் பரவி வைரலானதை தொடர்ந்து, தற்போது விஜய், திரிஷா பெயர்களில் அதே பேசஞ்சர் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
அதுவும் 12.12.2025 என்ற தினத்தை குறிப்பிட்டுள்ளது அந்த பேசஞ்சர் லிஸ்ட். 2024 என்பதை எடிட் செய்து 2025-ஆக மாற்றி சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வதந்திகளை உருவாக்கி வருகிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
