வெளியேறிய தீபிகா! அந்த இடத்தை பிடித்த திருப்தி டிம்ரி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா
அனிமல் பட இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் ஸ்பிரிட். இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கவிருந்தார். ஆனால், தீபிகா படுகோனின் கண்டிஷன் மற்றும் ஒர்க்கிங் ஸ்டைல் ஒத்துவராத காரணத்தினால், இப்படத்திலிருந்து அவரை வெளியேற்றிவிட்டார் இயக்குநர் சந்தீப் வங்கா ரெட்டி.
வெளியேறிய தீபிகா படுகோன், ஹீரோ - ஹீரோயின் இடையே நெருக்கமான மற்றும் Bold-ஆன காட்சிகள் இருக்கிறது. A Rated படம் என்பதால் தான் தீபிகாவிற்கு பதிலாக திருப்தி டிம்ரியை சந்தீப் வங்கா நடிக்க வைக்கிறார் என வெளியே கூறியதாகவும் தகவல் பரவி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி பதிவை வெளியிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சையாக பாலிவுட் வட்டாரத்தில் உலா வருகிறது.
இந்த நிலையில், தீபிகாவிற்கு பதிலாக கமிட்டாகியுள்ள நடிகை திருப்தி டிம்ரி, இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த ரோலில் நடிக்க தீபிகா படுகோன் ரூ. 20 கோடி கேட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக கமிட்டாகியுள்ள திருப்தி டிம்ரி ரூ. 4 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார் என பாலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்.