39 வயசாகியும் திருமணமாகாமல் தனிமையில் இருக்கும் நடிகை திரிஷா! வைரலாகும் ரகசிய புகைப்படங்கள்..

Trisha Ponniyin Selvan: I
1 மாதம் முன்
Edward

Edward

மாடலிங் துறையில் இருந்து மிஸ் சென்னை பட்டம் பெற்று சினிமாவில் 1999ல் காலெடி எடுத்து வைத்தவர் நடிகை திரிஷா. தமிழ் நடிகையாக ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து துணை நடிகையாக அறிமுகமாகினார்.

சினிமா அறிமுகம்:-

அதன்பின் 2 ஆண்டுகளுக்கு பிரகு நடிகர் சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். பின் மனசெல்லாம், சாமி, லேசா லேசா போன்ற படங்களின் ஹிட்டால் பேசப்படும் நடிகை லிஸ்ட்டில் இணைந்தார்.

39 வயசாகியும் திருமணமாகாமல் தனிமையில் இருக்கும் நடிகை திரிஷா! வைரலாகும் ரகசிய புகைப்படங்கள்.. | Trisha Birthday Wishes And Unseen Photo From Celeb

தோல்விகள்-வெற்றிகள் :-

அதன்பின் கில்லி, எனக்கு 20 உனக்கு 18, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஆறு, ஆதி, பீமா, குருவி, கிரீடம், போன்ற படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரங்களுக்கு இணையாக பேசப்பட்டார்.

அதன்பின் மங்காத்தா, மன்மதன் அம்பு, விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், அரண்மனை 2, கொடி போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகையாக கொடுக்கட்டி பறந்துவந்தார்.

ரீஎண்ட்ரி :-

அப்படங்களுக்கு பிறகு அவரின் மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. அதற்கு கடிவாளம் போடும் வகையில் விஜய் சேதுபதியுடன் ஜானு கதாபாத்திரம் திரிஷாவிற்கு மிகப்பெரிய ரீஎண்ட்ரி கொடுத்த படமாக அமைந்தது. தற்போது பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தும் இருக்கிறார். ஏற்கனவே நடித்த சதுரங்க வேட்டை 2வும் இன்னும் வெளியாகாமல் திரிஷாவிற்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

கிசுகிசு வதந்திகள் :-

இந்நிலையில் இடையில் சிம்பு, ராணா போன்ற நடிகர்களுடன் காதலி கிசுகிசுக்களிலும் சிக்கியும் வருன் மணியன் என்ற தொழிலதிபருடன் நிச்சம் வரை சென்று நின்றும் போனது.

தனிமை வாழ்க்கையில் 39 :-

தற்போது 39 வயதை தொட்டிருக்கும் நடிகை திரிஷா இன்னும் திருமணமாகாமல் தனிமையில் இருந்து வருகிறார். பல நட்சத்திரங்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி அவருடன் எடுத்த தனிப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். மேலும் இதுவரை பார்க்காத புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், இன்று காலை பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். திரிஷாவை பார்த்து ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

39 வயசாகியும் திருமணமாகாமல் தனிமையில் இருக்கும் நடிகை திரிஷா! வைரலாகும் ரகசிய புகைப்படங்கள்.. | Trisha Birthday Wishes And Unseen Photo From Celeb

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.