திருமணம் ஆகாத நடிகைகாக அந்த விஷயத்தை செய்த விஜய்.. ஏற்கனவே நான்கு முறை நடந்த விஷயம்
விஜய் தமிழ் சினிமாவின் அடையாள நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு படம் திரைக்கு வரவுள்ளது. வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கவுள்ள தளபதி 67 படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியானது.
இந்த தகவல் ஏறக்குறைய நூறு சதவீதம் உறுதியானது என தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நடிகை திரிஷா எப்படி பெற்றுள்ளார் தெரியுமா. தளபதி 67 படத்தில் நடிக்க வேண்டும் என்பதாற்காக விஜய்க்கு அழுத்தம் கொடுத்துள்ளாராம் திரிஷா.
அதன்பின், லோகேஷிடன் கூறி தளபதி 67 படத்தில் திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளாராம் விஜய். தனது மார்க்கெட்டை நயன்தாரா போல் மீண்டும் உச்சத்திற்கு எடுத்து செல்லவேண்டும் என்றால், விஜய்யுடன் இணைந்து நடித்தால் தான் முடியும் என்று எண்ணி இப்படியொரு விஷயத்தை விஜய்யை வைத்து செய்துள்ளாராம் திரிஷா.
இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தளபதி 67 படத்திற்கு முன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி என நான்கு முறை விஜய்யுடன் இணைந்து ஜோடியாக திரிஷா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.