அம்மா வேஷம் போடுகிறார் விசித்ரா!! திரிஷா கணவர் என்று சொன்ன Al சூர்யா ஓப்பன் டாக்...
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, லியோ படத்தினை தொடர்ந்து அஜித், கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார். லியோ படத்தில் திரிஷா கமிட்டாகியது முதல் விஜய் குடும்பத்தில் பிரச்சனை என்று கூறப்பட்டது.
ஆனால் இதற்கிடையில் நடிகை திரிஷா என் மனைவி என்றும் விஜய் மற்றும் விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடிப்பதால் திரிஷாவை கடுமையான வார்த்தைகளால் தரைக்குறைவாக பேசி வந்தார் ஆன்மீகவாதி ஏ எல் சூர்யா.
இதுகுறித்து திரிஷா ரசிகர்கள் அவரை வெளுத்து வாங்கிய நிலையில், திரிஷாவை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில், சமீபத்தில் திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் கேவலமாக பேசிய விசயமும், விசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு நடந்த காஸ்டிங் கவுச் குறித்த செய்தியும் பெரியளவில் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஏ எல் சூர்யா, பிக்பாஸ் 7 சீசனை விமர்சித்து, பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில், விசித்ரா மற்றவர்களிடம் உண்மையாகவும் பாசமாகவும் இருக்கிறார்.
ஆனால், அம்மா வேஷம் போடுகிறார். பிரதீப்பை குழந்தையாக பார்க்கிறேன் என்று கூறுவதெல்லாம் போலித்தனம். அம்மாவாக நடிக்கிறதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.