அஜித்தின் விடாமுயற்சி வெச்ச ஆப்பு!! கடும்கோபத்தில் நடிகை திரிஷா..
தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை இரு மடங்காக உயர்த்தி வருகிறார் நடிகை திரிஷா. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக அனைவரது கவனத்தை ஈர்த்த திரிஷா, லியோ படத்திலும் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்.
அப்படத்தினை தொடர்ந்து, அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் தங்க் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என பிஸியாக மாறி மாறி நடித்து வரும் திரிஷா, தற்போது விடாமுயற்சி படத்தால் கோபத்தில் என்ன செய்வது என்று முழித்தும் வருகிறாராம்.
ஏற்கனவே படத்தில் கமிட்டாகியது முதல் பலமுறை ஷூட்டிங் தள்ளிக்கொண்டே சென்று வருகிறதாம். Thug Life படத்தில் சேர்ந்துள்ளதால் அப்படத்தில் கால்ஷீட்டையும் விடாமுயற்சி கால்ஷீட்டையும் சமாளிக்க முடியவில்லையாம்.
அப்படி நிற்கவே நேரமில்லாமல் நடித்து கொண்டிருக்க, விடாமுயற்சி ஷூட்டிங் முடிக்காமல் இழுத்தடித்து வருவதால் ஏண்டா கமிட்டாகினோம் என்று தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக புலம்பி வருகிறாராம்.
ஹீரோயின் வாய்ப்பு தாரேன் சொல்லி 2 நாள் என்னை .. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்
இதனையடுத்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்திலும் நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. விடாமுயற்சி படத்தில் தாமதமான ஷூட்டிங், பாலிவுட்டில் தன்னுடைய முன்னேற்றத்தை தடுக்குமோ என்று யோசித்தும் வருகிறாராம் நடிகை திரிஷா.