நயன்தாராவும் வேண்டாம், ஐஸ்வர்யா ராயும் வேண்டாம்.. 39 வயது நடிகையை அஜித்திற்கு ஜோடியாக்க துடிக்கும் இயக்குனர்..

Ajith Kumar Trisha Vignesh Shivan
By Edward Oct 30, 2022 09:15 AM GMT
Report
105 Shares

உச்ச நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் துணிவு படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துவிட்டு கொஞ்சம் பிரேக் எடுத்துள்ளார்.

எச் வினோத்தின் வலிமை, துணிவு படத்திற்கு பின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் 62வது படத்தில் இணையவிருக்கிறார். இதற்காக விக்னேஷ் சிவன் கதை எழுதுவதில் ஆர்வமிட்டு வருகிறார். அனிருத் இசையில், லைக்கா பிரடொக்ஷனில் இப்படம் கூடிய சீக்கிரமே ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ளது.

நயன் தாரா - ஐஸ்வர்யா ராய்

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன் தாரா 10 சம்பளத்தில் நடிக்கவுள்ளதாக ஆரம்பத்தில் இருந்தே பேச்சு எழுந்தது. ஆனால் சமந்தா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளின் பெயர்களும் எழுந்தது. ஆனால் அப்படியில்லாமல் நடிகை திரிஷாவை அவருக்கு ஜோடியாக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டு இருக்கிறாராம்.

திரிஷா

ஏற்கனவே விஜய்யின் நடிக்க திரிஷா கமிட்டாகி இருக்கிறார் என்ற செய்தியும் வைரலானது. தற்போது ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களுக்கு பின் 5 வது முறையாக திரிஷா நடிக்கவுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. இது எந்தளவிற்கு உண்மை என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.