திரிஷா வளர்க்கும் செல்ல நாய் இஸ்ஸி!! இத்தனை சிறப்புகள் இருக்கா?

Trisha Tamil Actress Actress
By Edward Mar 08, 2026 04:45 AM GMT
Report

திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, சமீபத்தில் தவெக தலைவரும் நடிகருமான விஜய்யுடன் திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக சென்றது தான் தற்போதைய ஹாட் டாப்பிக். தன்மீது வைக்கப்படும் விமர்சனங்களை திரிஷா கண்டுக்கொள்ளாமல் தன்னுடைய செல்ல நாயுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்த வீடியோவில அவரது செல்ல நாய் இஸ்ஸி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திரிஷா வளர்க்கும் செல்ல நாய் இஸ்ஸி!! இத்தனை சிறப்புகள் இருக்கா? | Trisha Krishnan S Pet Dog Izzy Goes Viral

தற்போது திரிஷாவின் நாய் பற்றிய தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இஸ்ஸி - toy poodle(பொம்மை பூடில்) வகையை சேர்ந்ததாம். இந்த வகை நாய்கள் உலகம் முழுவதும் செல்லப்பிராணிகளாக மிகவும் பிரபலமானவையாம். toy poodle வகை நாய்கள் பொதுவாக சிறியளவில் தான் இருக்கும். வீட்டில் வளர்க்க ஏற்றதாக இருக்கும்.

இஸ்ஸி

toy poodle வகை நாய்கள் 3 முதல் 4 கிலோ வரை தான் வளரும். அதனால் எளிதாக எல்லோராலும் தூக்கிக்கொண்டு போகமுடியும் என்பதால் திரிஷா எப்போதும் அந்த நாயகி கையில் கொஞ்சியபடியே தூக்கில் செல்கிறார்.

திரிஷா வளர்க்கும் செல்ல நாய் இஸ்ஸி!! இத்தனை சிறப்புகள் இருக்கா? | Trisha Krishnan S Pet Dog Izzy Goes Viral

toy poodle வகை நாய்கள் அன்பானவை என்பதால் மனிதர்களுடன் விரைவாக பழகக்கூடிய தன்மை இருப்பதால் பலர் வீட்டில் வளர்க்க விரும்புவார்கள். toy poodle வகை நாய்கள் மிகவும் புத்திசாலித்தனமானவை. அதேநேரத்தில் விளையாட்டுத்தனமும் அதிகம் இருக்கும். அதனால் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் எளிதாக பழகிவிடும்.

அதுமட்டுமின்றி இந்த நாயின் ஆயுட்காலம் 12 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்குமாம். அதிக உடற்பயிற்சி இந்த நாய்க்கு தேவையில்லை என்பதால் குடியிருப்பு வீடுகளிலும் எளிதாக வளர்க்க முடியும். அதேபோல் இந்தநாய்க்கு அதிகமான முடி உதர்வு இருக்காது. முடி சுருளாக இருந்தாலும் அது அதிகமாக உதிராமல் தடிமனாக இருப்பதால் பராமரிப்பு செலவும் குறைவுதான்.