விஜய்யை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகும் த்ரிஷா.. உண்மையை கூறிய அவரது தாய்
நடிகை த்ரிஷா சினிமாவிலிருந்து விலகப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளிவந்தது. தளபதி விஜய்யை தொடர்ந்து த்ரிஷாவும் சினிமாவிலிருந்து விலகுகிறாரா? என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் சினிமாவிலிருந்து விலகி அரசியலில் எண்ட்ரி கொடுக்கப்போகிறாரா என்றும் கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், இந்த சர்ச்சைக்குறித்து த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன் விளக்கம் கொடுத்துள்ளார். இதில், த்ரிஷா சினிமாவிலிருந்து விலகி எங்கும் செல்லவில்லை, அவர் அரசியலுக்கும் செல்லவில்லை என அவர் உறுதியாக கூறியுள்ளாராம்.
இதன்மூலம் த்ரிஷா சினிமாவிலிருந்து விலகுவதாக வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. த்ரிஷா நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி படம் வெளிவரவுள்ள நிலையில், குட் பேட் அக்லி, விஸ்வம்பரா, சூர்யா 45 என பல படங்கள் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video