இவ்வளவு சொத்து இருந்தும் கல்யாணம் பண்ணாமல் தனிமையில் திரிஷா!! மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னை நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தில் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்து பின் மெளனம் பேசிய படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பின், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு போன்ற நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார். கமல், ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்த திரிஷா காதல், நிச்சயம் என்று ஏமாற்றத்தில் தோல்வியை கண்டதால் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தார்.
அதன்பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள திரிஷா சமீபத்தில் 39 வது பிறந்தநாளை கொண்டாடினார். கையில் சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில் திருமணம் செய்யாமல் இருக்கும் திரிஷா கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையை கடந்துள்ளார்.
லட்சத்தில் ஆரம்பத்தில் சம்பளம் வாங்கி தற்போது கோடியில் சம்பளம் வாங்கி வருகிறார். அம்மா பாட்டியுடன் வசித்து வரும் சென்னை வீட்டின் மதிப்பு சுமார் 6 கோடி மதிப்பாம்.
மேலும் ரேஞ்ச்ரோவர் எவோக் 63 லட்சம், 41 லட்சம் மதிப்பு உடைய பிஎம்டபிள்யூ மற்றும் 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் போன்ற கார்களையும் திரிஷா வைத்துள்ளார்.
தற்போது திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு 75 கோடியில் இருந்து 80 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.