விஜய் கையில் இருந்த நாய்.. 20 ஆயிரம் முத்தங்களைக் கொடுத்த த்ரிஷா
Vijay
Trisha
Tamil Cinema
By Bhavya
த்ரிஷா
20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருபவர் நடிகை த்ரிஷா. தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக 42 வயதிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
20 ஆயிரம் முத்தங்கள்
இந்நிலையில், த்ரிஷா அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், தனது நாய்க்குட்டியின் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, 3 ட்ரீட்களும் 20 ஆயிரம் முத்தங்களும் பெற்ற பின்னர்தான் ஓ.கே. ஆகியுள்ளது என கேப்ஷன் இட்டுள்ளார்.
இதை கண்ட ரசிகர்களும் இணையவாசிகளும் விஜய் கையில் தூக்கி கொஞ்சிய நாய்க்கு த்ரிஷா 20 ஆயிரம் முத்தங்களைக் கொடுத்துள்ளாரே, என கமெண்ட் செய்து வருகின்றனர்.