1,500 முறை.. உலக சாதனை படைத்த நடிகை த்ரிஷாவின் அதிரடி திரைப்படம்
த்ரிஷா
கோலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் விஜய், அஜித், ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார். இவர் கடைசியாக அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவரது நடிப்பில் குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
அதிரடி திரைப்படம்
இந்நிலையில், த்ரிஷா நடித்த தெலுங்கு படம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக திரிஷா நடித்து வெளியான திரைப்படம் அத்தடு.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சோனு சூட், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது, தொலைக்காட்சியில் அதிக முறை ஒளிபரப்பான படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது.
இந்த படம் இதுவரை தொலைக்காட்சியில் 1,500 முறை ஒளிபரப்பாகி உள்ளதாம். உலகளவில் எந்த படமும் இத்தனை முறை ஒளிபரப்பப்பட்டது இல்லை என்று சொல்லப்படுகிறது.