விஜய்யுடன் அப்படியொரு ஆட்டம்.. 500 ரூபாய் மட்டும் சம்பளம் வாங்கிய திரிஷா..

Trisha
By Kathick May 27, 2024 01:30 PM GMT
Report

முன்னணி நடிகை திரிஷா தற்போது பிசியாக தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். மேலும் விஜய்யுடன் GOAT திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.

விஜய்யுடன் அப்படியொரு ஆட்டம்.. 500 ரூபாய் மட்டும் சம்பளம் வாங்கிய திரிஷா.. | Trisha Salary Only 500 Rupees

லியோ படத்தை தொடர்ந்து மீண்டும் GOAT படத்தில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்திற்காக நடிகை திரிஷா ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், திரையுலகில் திரிஷா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

விஜய்யுடன் அப்படியொரு ஆட்டம்.. 500 ரூபாய் மட்டும் சம்பளம் வாங்கிய திரிஷா.. | Trisha Salary Only 500 Rupees

திரிஷா முதன் முதலில் நடிகையாக தலைகாட்டிய திரைப்படம் ஜோடி. பிரஷாந்த் மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து நடித்த இப்படத்தில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக திரிஷா நடித்திருப்பார். இப்படத்தில் நடிக்க திரிஷா ரூ. 500 சம்பளமாக வாங்கினார். இதுவே சினிமாவில் அவர் வாங்கிய முதல் சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.