நடிகை திரிஷாவுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சா!! அவர் போட்ட பதிவு இதோ..
நடிகை திரிஷா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா பற்றிய பேச்சுக்கள் தான் தற்போது அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் விஜய்யுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு சென்றது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

திரிஷாவை பற்றி சில எதிர்மறையாக பேசி வரும் நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவினையும் இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
தற்போது 43 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் சமீபத்தில் நடந்த தோழியின் திருமண நிகழ்ச்சிக்கு மும்பை சென்றுள்ளார். அங்கு சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.
இந்நிலையில், நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்தை பகிர்ந்து பூமாலையே தோள் சேரவா என்ற பாடலை இணைத்துள்ளார். இதனை பார்த்த பலரும் திரிஷாவுக்கு கல்யான ஆசை வந்துடுச்சு போல இருக்கே என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.







