விவாகரத்து விசயத்தால் சமந்தா, தனுஷை இப்படியா கிண்டல் செய்வது.. புது மாப்பிள்ளைக்கு நடிகை திரிஷா போட்ட கண்டீசன்
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
அப்படி இருந்த திரிஷா மார்க்கெட் இழக்க அந்த திருமணமே காரணமாக அமைந்தது. தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டு நிச்சயம் வரை சென்று கருத்து வேறுபாட்டால் திருமணத்தை நிறுத்தியது தான் காரணம். அதன்பின் சினிமாவிலும் திருமணத்திலும் தோல்வியை கண்டதால் 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். பலர் அவரிடன் எப்போது திருமணம் என்று கேட்க அவர் சில கண்டீசன்களுடன் பதிலளித்துள்ளார்.
அவரது ஆசை திருமணம் எப்போது என்று என்னிடம் கேட்டால் எனக்கு கூட தெரியாது. வாழ்நாள் முழுவதும் என்னுடன் செர்ந்திருக்கக்கூடிய மனிதர் இவர் தான் என்று தோன்ற வேண்டும். திருமணம் செய்து பின் விவாகரத்து பெற எனக்கு விரும்பம் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை திரிஷா.
இப்படி திரிஷா கூறியது திருமணம் செய்து 4 வருடத்தில் விவாகரத்து செய்து பின் சந்தோஷமாக இருந்து வரும் சமந்தாவை உதாரணமாக வைத்து தான் திரிஷா அப்படி கூறியுள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
மேலும் தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடிகளின் விவாகரத்து சமாச்சாரமும் இழுப்பறியில் இருப்பதை வைத்து திரிஷா திருமணத்திற்கு இப்படியொரு கண்டீசன் போட்டிருக்கலாம் என கூறி வருகிறார்கள்.