திரிஷா, சமந்தா முதல் பிரியங்கா வரை!! சேலை கட்டிவிடும் நபர் யார் தெரியுமா?
நடிகை சினேகா
90-ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து பிரபலமானவர் நடிகை சினேகா. தற்போது நயன் தாரா, சமந்தா உள்ளிட்ட நடிகைகளை போல் தனி பிசினஸிலும் ஈடுபட்டு வருகிறார்.
சினேகாலயா என்ற துணிக்கடைகளையில் சில இடங்களில் ஆரம்பித்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த மார்வலஸ் மார்கழி நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் பட்டுப்புடவையில் பங்கேற்றுள்ளார் சினேகா.

அந்நிகழ்ச்சிக்கு ரெடியாக சினேகாவுக்கு அட்டகாசமாக சேலையை கட்டிவிட்டுள்ளார் பிரபல டிராப்பிஸ்ட் திவ்யன் ஜெயரூபன். அவரை சினேகா அன்புடன் கட்டியணைத்து பாராட்டியுள்ள வீடியோவை சினேகா பகிர்ந்துள்ளார்.
சினேகா திரிஷா, சமந்தா முதல் பிரியங்கா
சினேகாவுக்கு மட்டிமின்றி, நடிகை திரிஷா, சமந்தா, விஜே பிரியங்கா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு பெரிய நிகழ்ச்சிகளுக்காக அவர்கள் பங்கேற்கும் போது சேலைக்கட்டி விடுகிறார். தற்போது டிராப்பிஸ்ட் திவ்யன் ஜெயரூபன் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.